logo

"உண்மையை முன்னிலைப்படுத்தும் ஒவ்வொரு செய்தியும் ஒரு மாற்றத்தின் தொடக்கம்."

📜 திருக்குறள்
Clear

குறள் 1323 கற்பியல்

புலத்தலின் புத்தேள்நாடு உண்டோ நிலத்தொடு

நீரியைந் தன்னார் அகத்து.

பொருள்

நிலத்தோடு நீர் பொருந்தி கலந்தாற் போன்ற அன்புடைய காதலரிடத்தில் ஊடுவதை விட இன்பம் தருகின்ற தேவருலம் இருக்கின்றதோ.

கலைஞர் உரை

நிலத்தோடு நீர் கலந்தது போல அன்புடன் கூடியிருக்கும் காதலரிடத்தில் ஊடல் கொள்வதை விடப் புதிய உலகம் வேறொன்று இருக்க முடியுமா?.

அதிகாரம் 133 : ஊடலுவகை காமத்துப்பால்
குறள் 1324 கற்பியல்

புல்லி விடாஅப் புலவியுள் தோன்றுமென்

உள்ளம் உடைக்கும் படை.

பொருள்

காதலரைத் தழுவிக்கொண்டு விடாமலிருப்பதற்கு காரணமான ஊடலுள், என்னுடைய உள்ளத்தை உடைக்க வல்ல படை தோன்றுகிறது.

கலைஞர் உரை

இறுகத் தழுவி இணை பிரியாமல் இருப்பதற்குக் காரணமாக ஊடல் அமைகிறது. அந்த ஊடலில்தான் என் உள்ளத்து உறுதியைக் குலைக்கும் படைக்கலனும் இருக்கிறது.

அதிகாரம் 133 : ஊடலுவகை காமத்துப்பால்
குறள் 1325 கற்பியல்

தவறிலர் ஆயினும் தாம்வீழ்வார் மென்றோள்

அகறலின் ஆங்கொன் றுடைத்து.

பொருள்

தவறு இல்லாத போதும் ஊடலுக்கு ஆளாகித் தாம் விரும்பும் மகளிரின் மெல்லிய தோள்களை நீங்கி இருக்கும் போது ஓர் இன்பம் உள்ளது.

கலைஞர் உரை

தவறே செய்யாத நிலையிலும்கூட தன்னுள்ளம் கொள்ளை கொண்டவளின் ஊடலுக்கு ஆளாகி அவளது மெல்லிய தோள்களைப் பிரிந்திருப்பதில் ஓர் இன்பம் இருக்கிறது.

அதிகாரம் 133 : ஊடலுவகை காமத்துப்பால்
குறள் 1326 கற்பியல்

உணலினும் உண்டது அறல்இனிது காமம்

புணர்தலின் ஊடல் இனிது.

பொருள்

உண்பதை விட முன் உண்ட உணவுச் செரிப்பது இன்பமானது, அதுபோல் காமத்தில் கூடுவதைவிட ஊடுதல் இன்பமானது.

கலைஞர் உரை

உணவு அருந்துவதைவிட, அருந்திய உணவு செரிப்பதிலே ஒரு சுகம். அதைப்போல் உடலுறவைவிட ஊடல் கொள்வதிலேயே காதலர்க்கு ஒரு சுகம்.

அதிகாரம் 133 : ஊடலுவகை காமத்துப்பால்
குறள் 1327 கற்பியல்

ஊடலில் தோற்றவர் வென்றார் அதுமன்னும்

கூடலிற் காணப் படும்.

பொருள்

ஊடலில் தோற்றவரே வெற்றி பெற்றவர் ஆவர், அந்த உண்மை,ஊடல் முடிந்த பின் கூடிமகிழும் நிலையில் காணப்படும்.

கலைஞர் உரை

ஊடல் என்கிற இனிய போரில் தோற்றவர்தான் வெற்றி பெற்றவராவார். இந்த உண்மை ஊடல் முடிந்து கூடிமகிழும் போது உணரப்படும்.

அதிகாரம் 133 : ஊடலுவகை காமத்துப்பால்
குறள் 1328 கற்பியல்

ஊடிப் பெறுகுவம் கொல்லோ நுதல்வெயர்ப்பக்

கூடலில் தோன்றிய உப்பு.

பொருள்

நெற்றி வியர்க்கும் படியாக கூடுவதில் உளதாகும் இனிமையை ஊடியிருந்து உணர்வதன் பயனாக இனியும் பெறுவோமோ.

கலைஞர் உரை

நெற்றியில் வியர்வை அரும்பிடக் கூடுவதால் ஏற்படும் இன்பத்தை, மீண்டும் ஒருமுறை ஊடல் தோன்றினால், அதன் வாயிலாகப் பெற முடியுமல்லவா?.

அதிகாரம் 133 : ஊடலுவகை காமத்துப்பால்
குறள் 1329 கற்பியல்

ஊடுக மன்னோ ஒளியிழை யாமிரப்ப

நீடுக மன்னோ இரா.

பொருள்

காதலி இன்னும் ஊடுவாளாக, அந்த ஊடலைத் தணிக்கும் பொருட்டு யாம் இரந்து நிற்குமாறு இராக்காலம் இன்னும் நீட்டிப்பதாக.

கலைஞர் உரை

ஒளி முகத்தழகி ஊடல் புரிவாளாக; அந்த ஊடலைத் தீர்க்கும் பொருட்டு நான் அவளிடம் இரந்து நிற்கும் இன்பத்தைப் பெறுவதற்கும் இராப்பொழுது இன்னும் நீடிப்பதாக.

அதிகாரம் 133 : ஊடலுவகை காமத்துப்பால்
குறள் 1330 கற்பியல்

ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம்

கூடி முயங்கப் பெறின்.

பொருள்

காமத்திற்கு இன்பம் தருவது ஊடுதல் ஆகும், ஊடல் முடிந்த பின் கூடித் தழுவப் பெற்றால் அந்த ஊடலுக்கு இன்பமாகும்.

கலைஞர் உரை

ஒருவருக்கொருவர் செல்லமாகச் சினங்கொண்டு பிரிந்திருப்பது எனப்படும் ஊடல், இருவரும் சேர்ந்த பிறகு காதல் இன்பத்தை அதிகமாகப் பருகிட உதவும். எனவே ஊடல் கொள்வதே ஒரு இன்பமான செயல்தான்.

அதிகாரம் 133 : ஊடலுவகை காமத்துப்பால்
திருவள்ளுவர்

திருவள்ளுவர்

திருக்குறள்

"மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம்
பெருந்தகை யான்கண் படின்."

🔸 கலைஞர் உரை

உலகில் உள்ள அனைத்திற்கும் ஒரு தொடக்கம் உள்ளது. மனித வாழ்க்கைக்கும் அறிவுக்கும் அடிப்படை ஆதாரம் மிக முக்கியமானது என்பதை உணர்த்துகிறது.

அதிகாரம்: 1 | குறள்: 217

🔥 பிரபல செய்திகள்

மேலும்

“தவெக-வில் இணைய கட்டாயப்படுத்தினர்… உடன்படாததால் சிறைவாசம்” – அனிதா ராதாகிருஷ்ணன் அதிரடி குற்றச்சாட்டு

1 month ago

அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த தவெக! அதிமுகவில் இருந்து விலகி பதவியை பறிகொடுத்த 4 முன்னாள் எம்.எல்.ஏ.க்களுக்கு சீட் இல்லையா?

1 month ago

சட்டப்பேரவையில் அனல் பறந்த விவாதம்: CM விஜய்யின் குட்டிக்கதைக்கு உதயநிதி ஸ்டாலின் ட்விட்டரில் (X) பதிலடி!

1 month ago

💰 மார்க்கெட் அப்டேட்ஸ்

🟡 தங்கம்₹16,091/g
⚪ வெள்ளி₹300/g
📈 சென்செக்ஸ்75,084.78

🌤 வானிலை

34°C

தூத்துக்குடி

Cloudy | Humidity 57%

world map
logo

“தொழில்நுட்ப வளர்ச்சி வேகம் பெற்றுள்ள இன்றைய உலகில், நவீன காலகட்டத்தின் தேவைகளையும் கருத்தில் கொண்டு, சமூக மாற்றத்தை புரிந்துகொண்டு, நலம் தரும் செய்திகளை உடனுக்குடனும், உண்மைத் தகவல்களுடன் வழங்குவது தான் நமது நோக்கம்.”

Contact us: onepixeldigitalmedia@gmail.com

© 2026 ONEPIXEL DIGITAL MEDIA. All Rights Reserved. | Design & Developed by ONEPIXEL TECHNOLOGIES
OnePixel Logo
ONEPIXEL DIGITAL MEDIA
TAMIL NEWS & DIGITAL CONTENT
திருவள்ளுவர்
திருவள்ளுவர்
திருக்குறள்

பொருள்
கலைஞர் உரை
🌐 WWW.ONEPIXELDIGITALMEDIA.COM