logo

"உண்மையை முன்னிலைப்படுத்தும் ஒவ்வொரு செய்தியும் ஒரு மாற்றத்தின் தொடக்கம்."

📜 திருக்குறள்
Clear

குறள் 191 இல்லறவியல்

பல்லார் முனியப் பயனில சொல்லுவான்

எல்லாரும் எள்ளப் படும்.

பொருள்

கேட்டவர் பலரும் வெறுக்கும் படியாகப் பயனில்லாத சொற்களைச் சொல்லுகின்றவன், எல்லாராலும் இகழப்படுவான்

கலைஞர் உரை

பலரும் வெறுக்கும்படியான பயனற்ற சொற்களைப் பேசுபவரை எல்லாரும் இகழ்ந்துரைப்பார்கள்.

அதிகாரம் 20 : பயனில சொல்லாமை அறத்துப்பால்
குறள் 192 இல்லறவியல்

பயனில பல்லார்முன் சொல்லல் நயனில

நட்டார்கண் செய்தலிற் றீது.

பொருள்

பலர் முன்னே பயனில்லாத சொற்களைச் சொல்லுதல், நண்பரிடத்தில் அறம் இல்லா செயல்களைச் செய்தலை விடத் தீமையானதாகும்.

கலைஞர் உரை

பலர்முன் பயனில்லாத சொற்களைக் கூறுவது, நட்புக்கு மாறாகச் செயல்படுவதைக் காட்டிலும் தீமையுடையதாகும்.

அதிகாரம் 20 : பயனில சொல்லாமை அறத்துப்பால்
குறள் 193 இல்லறவியல்

நயனிலன் என்பது சொல்லும் பயனில

பாரித் துரைக்கும் உரை.

பொருள்

ஒருவன் பயனில்லா பொருள்களைப் பற்றி விரிவாகச் சொல்லும் சொற்கள், அவன் அறம் இல்லாதவன் என்பதை அறிவிக்கும்.

கலைஞர் உரை

பயனற்றவைகளைப்பற்றி ஒருவன் விரிவாகப் பேசிக் கொண்டிருப்பதே அவனைப் பயனற்றவன் என்று உணர்த்தக் கூடியதாகும்.

அதிகாரம் 20 : பயனில சொல்லாமை அறத்துப்பால்
குறள் 194 இல்லறவியல்

நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப்

பண்பில்சொல் பல்லா ரகத்து.

பொருள்

பயனோடு பொருந்தாத பண்பு இல்லாத சொற்களைப் பலரிடத்தும் சொல்லுதல், அறத்தோடு பொருந்தாமல் நன்மையிலிருந்து நீங்கச் செய்யும்.

கலைஞர் உரை

பயனற்றதும், பண்பற்றதுமான சொற்களைப் பலர்முன் பகர்தல் மகிழ்ச்சியைக் குலைத்து, நன்மையை மாய்க்கும்.

அதிகாரம் 20 : பயனில சொல்லாமை அறத்துப்பால்
குறள் 195 இல்லறவியல்

சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனில

நீர்மை யுடையார் சொலின்.

பொருள்

பயனில்லாத சொற்களை நல்ல பண்பு உடையவர் சொல்லுவாரானால், அவனுடைய மேம்பாடு அவர்க்குரிய மதிப்போடு நீங்கிவிடும்.

கலைஞர் உரை

நல்ல பண்புடையவர் பயனில்லாத சொற்களைக் கூறுவாரானால் அவருடைய மேம்பாடு அவர்க்குரிய மதிப்போடு நீங்கி விடும்.

அதிகாரம் 20 : பயனில சொல்லாமை அறத்துப்பால்
குறள் 196 இல்லறவியல்

பயனில் சொல் பராட்டு வானை மகன்எனல்

மக்கட் பதடி யெனல்.

பொருள்

பயனில்லாத சொற்களைப் பலமுறையும் சொல்லுகின்ற ஒருவனை மனிதன் என்று சொல்லக்கூடாது, மக்களுள் பதர் என்று சொல்லவேண்டும்.

கலைஞர் உரை

பயனற்றவைகளைச் சொல்லிப் பயன்பெற நினைப்பவனை, மனிதன் என்பதைவிட அவன் ஒரு பதர் என்பதே பொருத்தமானதாகும்.

அதிகாரம் 20 : பயனில சொல்லாமை அறத்துப்பால்
குறள் 197 இல்லறவியல்

நயனில சொல்லினுஞ் சொல்லுக சான்றோர்

பயனில சொல்லாமை நன்று.

பொருள்

அறம் இல்லாதவற்றைச் சொன்னாலும் சொல்லலாம், சான்றோர் பயன் இல்லாத சொற்களைச் சொல்லாமல் இருத்தல் நன்மையாகும்.

கலைஞர் உரை

பண்பாளர்கள், இனிமையல்லாத சொற்களைக்கூடச் சொல்லி விடலாம்; ஆனால் பயனில்லாத சொற்களைச் சொல்லாமல் இருப்பதே நல்லது.

அதிகாரம் 20 : பயனில சொல்லாமை அறத்துப்பால்
குறள் 198 இல்லறவியல்

அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார்

பெரும்பயன் இல்லாத சொல்.

பொருள்

அருமையான பயன்களை ஆராயவல்ல அறிவை உடைய அறிஞர், மிக்க பயன் இல்லாத சொற்களை ஒருபோதும் சொல்லமாட்டார்

கலைஞர் உரை

அரும்பயன்களை ஆராய்ந்து அறியக்கூடிய ஆற்றல் படைத்தவர், பெரும்பயன் விளைவிக்காத எந்தச் சொல்லையும் பயன்படுத்த மாட்டார்.

அதிகாரம் 20 : பயனில சொல்லாமை அறத்துப்பால்
குறள் 199 இல்லறவியல்

பொருள்தீர்ந்த பொச்சாந்துஞ் சொல்லார் மருள்தீர்ந்த

மாசறு காட்சி யவர்.

பொருள்

மயக்கத்திலிருந்து தெளிந்த மாசற்ற அறிவை உடையவர், பயன் நீங்கிய சொற்களை ஒருகால் மறந்தும் சொல்லமாட்டார்.

கலைஞர் உரை

மயக்கம் சிறிதுமில்லாத மாசற்ற அறிவுடையவர் மறந்தும்கூடப் பயனற்ற சொற்களைச் சொல்ல மாட்டார்.

அதிகாரம் 20 : பயனில சொல்லாமை அறத்துப்பால்
குறள் 200 இல்லறவியல்

சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க

சொல்லிற் பயனிலாச் சொல்.

பொருள்

சொற்களில் பயன் உடைய சொற்களை மட்டுமே சொல்லவேண்டும், பயன் இல்லாதவைகளாகிய சொற்களை சொல்லவே கூடாது.

கலைஞர் உரை

பயனளிக்காத சொற்களை விடுத்து மனத்தில் பதிந்து பயனளிக்கக் கூடிய சொற்களையே கூற வேண்டும்.

அதிகாரம் 20 : பயனில சொல்லாமை அறத்துப்பால்
திருவள்ளுவர்

திருவள்ளுவர்

திருக்குறள்

"படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார்
நடுவன்மை நாணு பவர்."

🔸 கலைஞர் உரை

உலகில் உள்ள அனைத்திற்கும் ஒரு தொடக்கம் உள்ளது. மனித வாழ்க்கைக்கும் அறிவுக்கும் அடிப்படை ஆதாரம் மிக முக்கியமானது என்பதை உணர்த்துகிறது.

அதிகாரம்: 1 | குறள்: 172

🔥 பிரபல செய்திகள்

மேலும்

மேகதாது அணைக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றம்

2 days ago

ஐரோப்பிய நாடுகளில் 6 நாள் சுற்றுப்பயணம்: முதலீடுகளை ஈர்க்க பிரான்ஸ் மற்றும் ஸ்லோவாக்கியா செல்லும் பிரதமர் மோடி!

1 week ago

மாவட்டத்தின் அடையாளம் முதல் விலகல் வரை: தவெக-வில் ஐக்கியமான அதிமுக முன்னாள் அமைச்சர்களின் முழு பின்னணி!

2 weeks ago

💰 மார்க்கெட் அப்டேட்ஸ்

🟡 தங்கம்₹16,091/g
⚪ வெள்ளி₹300/g
📈 சென்செக்ஸ்75,084.78

🌤 வானிலை

34°C

தூத்துக்குடி

Cloudy | Humidity 57%

world map
logo

“தொழில்நுட்ப வளர்ச்சி வேகம் பெற்றுள்ள இன்றைய உலகில், நவீன காலகட்டத்தின் தேவைகளையும் கருத்தில் கொண்டு, சமூக மாற்றத்தை புரிந்துகொண்டு, நலம் தரும் செய்திகளை உடனுக்குடனும், உண்மைத் தகவல்களுடன் வழங்குவது தான் நமது நோக்கம்.”

Contact us: onepixeldigitalmedia@gmail.com

© 2026 ONEPIXEL DIGITAL MEDIA. All Rights Reserved. | Design & Developed by ONEPIXEL TECHNOLOGIES
OnePixel Logo
ONEPIXEL DIGITAL MEDIA
TAMIL NEWS & DIGITAL CONTENT
திருவள்ளுவர்
திருவள்ளுவர்
திருக்குறள்

பொருள்
கலைஞர் உரை
🌐 WWW.ONEPIXELDIGITALMEDIA.COM