logo

"உண்மையை முன்னிலைப்படுத்தும் ஒவ்வொரு செய்தியும் ஒரு மாற்றத்தின் தொடக்கம்."

📜 திருக்குறள்
Clear

குறள் 542 அரசியல்

வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்

கோல் நோக்கி வாழுங் குடி.

பொருள்

உலகத்தில் உள்ள உயிர்கள் எல்லாம் மழையை நம்பி வாழ்கின்றன, அதுபோல் குடிமக்கள் எல்லாம் அரசனுடைய செங்கோலை நோக்கி வாழ்கின்றனர்.

கலைஞர் உரை

உலகில் உள்ள உயிர்கள் வாழ்வதற்கு மழை தேவைப்படுவது போல ஒரு நாட்டின் குடிமக்கள் வாழ்வதற்கு நல்லாட்சி தேவைப்படுகிறது. மு.வ உரை

அதிகாரம் 55 : செங்கோன்மை பொருட்பால்
குறள் 543 அரசியல்

அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்

நின்றது மன்னவன் கோல்.

பொருள்

அந்தணர் போற்றும் மறைநூலுக்கும் அறத்திற்கும் அடிப்படையாய் நின்று உலகத்தைக் காப்பது அரசனுடைய செங்கோலாகும்.

கலைஞர் உரை

ஓர் அரசின் செங்கோன்மைதான் அறவோர் நூல்களுக்கும் அறவழிச் செயல்களுக்கும் அடிப்படையாக அமையும். மு.வ உரை

அதிகாரம் 55 : செங்கோன்மை பொருட்பால்
குறள் 544 அரசியல்

குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன்

அடிதழீஇ நிற்கும் உலகு.

பொருள்

குடிகளை அன்போடு அணைத்துக் கொண்டு செங்கோல் செலுத்துகின்ற அரசனுடைய அடியைப்பொருந்தி உலகம் நிலை பெறும்.

கலைஞர் உரை

குடிமக்களை அரவணைத்து ஆட்சி நடத்தும் நல்லரசின் அடிச்சுவட்டை நானிலமே போற்றி நிற்கும். மு.வ உரை

அதிகாரம் 55 : செங்கோன்மை பொருட்பால்
குறள் 545 அரசியல்

இயல்புளிக் கோலோச்சும் மன்னவன் நாட்ட

பெயலும் விளையுளும் தொக்கு.

பொருள்

நீதி முறைப்படி செங்கோல் செலுத்தும் அரசனுடைய நாட்டில் பருவ மழையும் நிறைந்த விளைவும் ஒருசேர ஏற்படுவனவாகும்.

கலைஞர் உரை

நீதி வழுவாமல் ஓர் அரசு நாட்டில் இருக்குமேயானால் அது, பருவகாலத்தில் தவறாமல் பெய்யும் மழையினால் வளமான விளைச்சல் கிடைப்பதற்கு ஒப்பானதாகும். மு.வ உரை

அதிகாரம் 55 : செங்கோன்மை பொருட்பால்
குறள் 546 அரசியல்

வேலன்று வென்றி தருவது மன்னவன்

கோலதூஉங் கோடா தெனின்.

பொருள்

ஒருவனுக்கு வெற்றி பெற்றுத் தருவது வேல் அன்று, அரசனுடைய செங்கோலே ஆகும், அச் செங்கோலும் கோணாதிருக்குமாயின்.

கலைஞர் உரை

ஓர் அரசுக்கு வெற்றியைத் தருவது பகைவரை வீழ்த்தும் வேலல்ல; குடிமக்களை வாழவைக்கும் வளையாத செங்கோல்தான். மு.வ உரை

அதிகாரம் 55 : செங்கோன்மை பொருட்பால்
குறள் 547 அரசியல்

இறைகாக்கும் வையகம் எல்லாம் அவனை

முறைகாக்கும் முட்டாச் செயின்.

பொருள்

உலகத்தை எல்லாம் அரசன் காப்பாற்றுவான், நீதிமுறை கெடாதவாறு ஆட்சி செய்வானாயின் அரசனை அந்த முறையே காப்பாற்றும்.

கலைஞர் உரை

நீதி வழுவாமல் ஓர் அரசு நடைபெற்றால் அந்த அரசை அந்த நீதியே காப்பாற்றும். மு.வ உரை

அதிகாரம் 55 : செங்கோன்மை பொருட்பால்
குறள் 548 அரசியல்

எண்பதத்தான் ஓரா முறைசெய்யா மன்னவன்

தண்பதத்தான் தானே கெடும்.

பொருள்

எளிய செவ்வி உடையவனாய் ஆராய்ந்து நீதி முறை செய்யாத அரசன், தாழ்ந்த நிலையில் நின்று (பகைவரில்லாமலும் ) தானே கெடுவான்.

கலைஞர் உரை

ஆடம்பரமாகவும், ஆராய்ந்து நீதி வழங்காமலும் நடைபெறுகிற அரசு தாழ்ந்த நிலையடைந்து தானாகவே கெட்டொழிந்து விடும். மு.வ உரை

அதிகாரம் 55 : செங்கோன்மை பொருட்பால்
குறள் 549 அரசியல்

குடிபுறங் காத்தோம்பிக் குற்றம் கடிதல்

வடுவன்று வேந்தன் தொழில்.

பொருள்

குடிகளைப் பிறர் வருந்தாமல் காத்து, தானும் வருந்தாமல் காப்பாற்றி, அவற்களுடைய குற்றங்களைத் தக்க தண்டனையால் ஒழித்தல், அரசனுடைய தொழில் பழி அன்று.

கலைஞர் உரை

குடிமக்களைப் பாதுகாத்துத் துணை நிற்பதும், குற்றம் செய்தவர்கள் யாராயினும் தனக்கு இழுக்கு வரும் என்று கருதாமல் தண்டிப்பதும் அரசின் கடமையாகும். மு.வ உரை

அதிகாரம் 55 : செங்கோன்மை பொருட்பால்
குறள் 550 அரசியல்

கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்

களைகட் டதனொடு நேர்.

பொருள்

கொடியவர் சிலரைக் கொலைத்தண்டனையால் அரசன் ஒறுத்தல் பயிரைக் காப்பாற்றக் களையைச் களைவதற்க்கு நிகரான செயலாகும்.

கலைஞர் உரை

கொலை முதலிய கொடுமைகள் புரிவோரை, ஓர் அரசு தண்டனைக்குள்ளாக்குவது பயிரின் செழிப்புக்காகக் களை எடுப்பது போன்றதாகும். மு.வ உரை

அதிகாரம் 55 : செங்கோன்மை பொருட்பால்
குறள் 551 அரசியல்

கொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்கொண்டு

அல்லவை செய்தொழுகும் வேந்து.

பொருள்

குடிகளை வருத்தும் தொழிலை மேற்கொண்டு, முறையல்லாத செயல்களைச் செய்து நடக்கும் அரசன் கொலைத் தொழிலைக் கொண்டவரை விடக் கொடியவன்.

கலைஞர் உரை

அறவழி மீறிக் குடிமக்களைத் துன்புறுத்தும் அரசு, கொலையைத் தொழிலாகக் கொண்டவரைவிடக் கொடியதாகும்.

அதிகாரம் 56 : கொடுங்கோன்மை பொருட்பால்
திருவள்ளுவர்

திருவள்ளுவர்

திருக்குறள்

"இலமென்று வெஃகுதல் செய்யார் புலம்வென்ற
புன்மையில் காட்சி யவர்."

🔸 கலைஞர் உரை

உலகில் உள்ள அனைத்திற்கும் ஒரு தொடக்கம் உள்ளது. மனித வாழ்க்கைக்கும் அறிவுக்கும் அடிப்படை ஆதாரம் மிக முக்கியமானது என்பதை உணர்த்துகிறது.

அதிகாரம்: 1 | குறள்: 174

🔥 பிரபல செய்திகள்

மேலும்

மேகதாது அணைக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றம்

3 days ago

ஐரோப்பிய நாடுகளில் 6 நாள் சுற்றுப்பயணம்: முதலீடுகளை ஈர்க்க பிரான்ஸ் மற்றும் ஸ்லோவாக்கியா செல்லும் பிரதமர் மோடி!

1 week ago

மாவட்டத்தின் அடையாளம் முதல் விலகல் வரை: தவெக-வில் ஐக்கியமான அதிமுக முன்னாள் அமைச்சர்களின் முழு பின்னணி!

2 weeks ago

💰 மார்க்கெட் அப்டேட்ஸ்

🟡 தங்கம்₹16,091/g
⚪ வெள்ளி₹300/g
📈 சென்செக்ஸ்75,084.78

🌤 வானிலை

34°C

தூத்துக்குடி

Cloudy | Humidity 57%

world map
logo

“தொழில்நுட்ப வளர்ச்சி வேகம் பெற்றுள்ள இன்றைய உலகில், நவீன காலகட்டத்தின் தேவைகளையும் கருத்தில் கொண்டு, சமூக மாற்றத்தை புரிந்துகொண்டு, நலம் தரும் செய்திகளை உடனுக்குடனும், உண்மைத் தகவல்களுடன் வழங்குவது தான் நமது நோக்கம்.”

Contact us: onepixeldigitalmedia@gmail.com

© 2026 ONEPIXEL DIGITAL MEDIA. All Rights Reserved. | Design & Developed by ONEPIXEL TECHNOLOGIES
OnePixel Logo
ONEPIXEL DIGITAL MEDIA
TAMIL NEWS & DIGITAL CONTENT
திருவள்ளுவர்
திருவள்ளுவர்
திருக்குறள்

பொருள்
கலைஞர் உரை
🌐 WWW.ONEPIXELDIGITALMEDIA.COM